நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மத் படாவி மறைவு: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இரங்கல் 

சிங்கப்பூர்: 

மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மத் படாவி நேற்று ஏப்ரல் 14ஆம் தேதி தமது 85ஆவது வயதில் காலமானார். 

அவரின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தருவதாகத் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

ஆறு ஆண்டாகப் பிரதமராய் இருந்த அப்துல்லா படாவி, ஆசியான் நிலையை உயர்த்த உதவினார் என்று பிரதமர் வோங் சொன்னார்.

துன் அப்துல்லா படாவி சிங்கப்பூரின் நண்பர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அவரது தலைமையில் இரு தரப்புக்கும் பயனளிக்கும் அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிந்ததாகத் வோங் சொன்னார்.

மலேசிய மக்களின் இழப்புக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத்  வோங் தெரிவித்துக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset