நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மத் படாவி மறைவு: இலக்கவியல் அமைச்சின் நோன்பு பெருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து 

கோலாலம்பூர்: 

நாட்டின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மத் படாவி காலமானதையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இலக்கவியல் அமைச்சின் சார்பாக இன்று நடத்தப்படவிருந்த நோன்பு பெருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் யாவும் ரத்து செய்யப்படுவதாக இலக்கவியல் அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

இலக்கவியல் அமைச்சின் உயர்மட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ள நிலையில் அன்னாரின் மறைவுக்கு மரியாதை செலுத்தப்படும் என்று குறிப்பிட்டனர். 

85 வயதான துன் அப்துல்லா அஹ்மத் படாவி நேற்றிரவு 7.10 மணிக்கு கோலாலம்பூர் தேசிய இருதய கழகத்தில் காலமானார்.  

துன் அப்துல்லா படாவி மறைவுக்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று இலக்கவியல் அமைச்சு தெரிவித்தது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset