நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் கல்வி வாய்ப்புகளுக்கான சவால்களை எதிர்கொள்ள இந்திய மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்: டத்தோ நெல்சன்

பெட்டாலிங் ஜெயா:

உயர் கல்வி வாய்ப்புகளுக்கான சவால்களை எதிர்கொள்ள இந்திய மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

மஇகா உதவித் தலைவரும் கல்விக் குழுத் தலைவருமான டத்தோ நெல்சன் ரெங்கநாதன் இதனை கூறினார்.

கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று தங்களின் தேர்வு முடிவுகளை பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை பெற்ற அனைத்து மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

பல மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தது போல் இருக்கும். பல மாணவர்களுக்கு எதிர்பார்த்தது போல் இருக்காது.

எது எப்படி இருந்தாலும் இம்முடிவுகள் இறுதியானது அல்ல. அதே வேளையில் எந்த முடிவு கிடைத்திருந்தாலும் அதற்கு ஏற்ப உயர் கல்வி வாய்ப்புகள் உள்ளன.

இந்த வாய்ப்புகளை மாணவர்கள் முறையாக தேர்வு செய்து படிக்க வேண்டும்.

குறிப்பாக அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் சரியான துறைகளை தேர்வு செய்ய வேண்டும்.

இதை தவிர்த்து திவேட் கல்வியும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக உள்ளது என்று டத்தோ நெல்சன் கூறினார்.

உயர் கல்வி விவகாரத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கைகொடுக்க மஇகா கல்வி குழு தயாராக உள்ளது.

மாணவர்கள் நாங்கள் வழங்கும் கியூஆர் கோட் வாயிலாக பதிவு செய்து தங்களின் பிரச்சினைகளை பதிவு செய்யலாம்.

அம்மாணவர்களுக்கு உரிய வழிகாட்டல்களை நாங்கள் வழங்குவோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset