
செய்திகள் மலேசியா
சித்திரைப் புத்தாண்டு இந்திய சமூகத்திற்கு பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரும்: டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை
புத்ராஜெயா:
சித்திரைப் புத்தாண்டு இந்திய சமூகத்திற்கு பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரும்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
நாட்டின் வளர்ச்சியுடன் இணைந்து இந்திய சமூகம் முன்னேற பொருளாதாரமும் மேம்பாடு காண வேண்டும்.
சித்திரை புத்தாண்டுடன் விஷு, வைசாக்கி புத்தாண்டுகளை கொண்டாடும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்திய சமூகம் பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொள்ளவும் வலுப்படுத்தவும் இந்த புத்தாண்டு வழிவகுக்கும்.
குறிப்பாக வர்த்தகர்கள், சிறு, நடுத்தர தொழில்முனைவோர் மத்தியில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும்.
தோட்டத்துறை, வணிகம், பொதுத் துறைகள் உட்பட நாட்டின் வளர்ச்சியில் இந்திய சமூகத்தின் பங்கையும் ஈடுபாட்டையும் யாராலும் மறுக்க முடியாது.
நாட்டில் இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான நம்பிக்கைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் சமூகத்திற்குள் ஒற்றுமையின் அம்சங்கள் மேலும் வலுப்பெற வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய சமூகமும் தொடர்ந்து பொருளாதாரத் துறையில் முன்னேற வேண்டும்.
இதுவே எனது எதிர்பார்ப்பாகும் என டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 11:05 am
துன் அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி
April 14, 2025, 11:52 pm
அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் என்னை வழிநடத்திய ஒரு தந்தை துன் அப்துல்லா படாவி: இஸ்மாயில் சப்ரி
April 14, 2025, 11:50 pm
கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவராக ராஜன் முனுசாமி அமோக வெற்றி
April 14, 2025, 11:48 pm
பேரா கெஅடிலான் தேர்தலில் 3 மக்கள் பிரதிநிதிகள் தோல்வி: சுங்கை சிப்புட்டில் நோவிந்தன் வெற்றி
April 14, 2025, 11:23 pm
துன் அப்துல்லாஹ் உன்னதமான, அமைதியான அரசியல்வாதியாக நினைவுகூரப்படுவார்: ஜாஹித்
April 14, 2025, 8:56 pm
உண்மையான அரசியல்வாதியின் இழப்பால் முழு தேசமும் துக்கப்படுகிறது: பிரதமர் அன்வார்
April 14, 2025, 7:55 pm