
செய்திகள் மலேசியா
துன் அப்துல்லாஹ் படாவியின் உடல் நாளை தேசிய பள்ளிவாசலில் உள்ள மாவீரர் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்: கைரி
கோலாலம்பூர்:
மறைந்து துன் அப்துல்லாஹ் படாவியின் உடல் நாளை தேசிய பள்ளிவாசலில் உள்ள மாவீரர் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.
துன் படாவியின் மருமகனும் பிரபல அரசியல் தலைவருமான கைரி ஜமாலுடின் இதனை உறுதிப்படுத்தினார்.
ஐந்தாவது பிரதமரான மறைந்த துன் அப்துல்லாஹ் படாவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் பொதுமக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேசிய பள்ளிவாசலில் அஞ்சலி செலுத்தலாம்.
அவரை அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேசிய பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகைக்குப் பிறகு பிரதான பிரார்த்தனை மண்டபத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படும்.
பாக் லாவுக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்பும் எவரும் தேசிய பள்ளிவாசலுக்கு வரலாம். முஸ்லிம் அல்லாதவர்கள், பள்ளிவாசலுக்கு வரலாம். அதில் தடை ஏதும் இல்லை. அவர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து வர வேண்டும்.
நண்பகலுக்குப் பிறகு, பாக் லாவுக்கு இறுதித் தொழுகையும் பிரார்த்தனையும் நடைபெறும். அதன் பிறகு அவர் தேசிய பள்ளிவாசலில் உள்ள மாவீரர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவார்.
இன்று இரவு தேசிய இதய நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கைரி ஜமாலுடின் இதனை அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2025, 9:11 pm
பேச்சு சுதந்திரம் போய்விட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்: துன் மகாதீர்
April 16, 2025, 8:20 pm
பிறை இல்லாத தேசியக் கொடி ஏற்றுக் கொள்ள முடியாதது: மாமன்னர்
April 16, 2025, 8:10 pm
சின் சியூ செய்தித்தாள் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு: உள்துறை அமைச்சு உத்தரவு
April 16, 2025, 2:08 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
April 16, 2025, 2:06 pm
சிங்கப்பூரில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தவருக்குச் சிறை
April 16, 2025, 2:05 pm
கெஅடிலான் கட்சித் தேர்தலில் பண அரசியலா?; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: பிரபாகரன்
April 16, 2025, 2:05 pm
பிறை இல்லாத தேசியக் கொடி: கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஸ்லி மாலிக்
April 16, 2025, 2:04 pm