நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் என்னை வழிநடத்திய ஒரு தந்தை துன் அப்துல்லா படாவி: இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்:

அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் என்னை வழிநடத்திய ஒரு தந்தை மறைந்து துன் அப்துல்லா படாவி என்று முன்னாள் பிரதார் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

பாக் லா என்று அழைக்கப்படும்  துன் அப்துல்லா படாவியின் மறைவுக்கு தேசமே இரங்கல் தெரிவிக்கிறது.

அனைத்து மக்களும், குறிப்பாக நான் தனிப்பட்ட முறையில் அவரின் சேவைகளை பெரிதும் பாராட்டுகிறேன்.

2004ஆம் ஆண்டு பெரா நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட தன்னம்பிக்கை அளித்த அப்துல்லாவுக்கும்,

2008 ஆம் ஆண்டு இளைஞர், விளையாட்டு அமைச்சராக நியமித்ததற்கும் தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாக டத்தோஶ்ரீ இஸ்மாயில் பகிர்ந்து கொண்டார்.

நான் எனது உச்சத்தை அடையும் வரை அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் என்னை வழிநடத்திய ஒரு தந்தையைப் போல இருந்தார்.

அவரின் மறைவு எனக்கும் இந்நாட்டிற்கும் பெரும் பேரிழப்பு என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset