நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மத் படாவி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 85 ஆகும். 

1MDB வழக்கு விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், துன் அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது 

இறுதி மரியாதை செலுத்துவதற்காக நஜிப்பிற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நீதிமன்றம் அதன் வழக்கு விசாரணையை காலை 9.50 மணிக்கு ஒத்திவைத்தது 

அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த தேசிய சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது என்று நஜிப்பின் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா, நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா கூறினார் 

துன் அப்துல்லா அஹ்மத் படாவி அமைச்சரவையில் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை துணைப்பிரதமராக பொறுப்பு வகித்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset