நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவராக ராஜன் முனுசாமி அமோக வெற்றி

காஜாங்:

கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவருக்கான தேர்தலில் ராஜன் முனுசாமி 1845 வாக்குகளுடன் மகத்தான வெற்றி பெற்றார்.

இதன் வாயிலாக இத்தொகுதியின் தலைவர் பதவியை இவர் தக்க வைத்துக் கொண்டார்.

இத்தேர்தலில் ராஜனை எதிர்த்துப் போட்டியிட்ட முகமது ஹானாபி ஜாலாலுடின் 1072 வாக்குகள் பெற்றார்.

கெஅடிலான் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நேர்மையான,  நம்பிக்கையான தலைமைத்துவத்தின் கீழ் இக்கட்சி மக்கள் குரலாக ஒலிக்கிறது.

நேற்று முன்தினம் சிலாங்கூர் உட்பட சில தொகுதிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த வெற்றியை அடைவதற்கு எங்களுக்குப் பக்க பலமாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமுவந்த நன்றி என்றார் ராஜன்.

போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் இவர் பாராட்டுகள் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset