நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எளிமையான மதிப்புகளுடன் மக்களின் அடையாளத்தை வடிவமைத்த ஒரு அரசியல் தலைவரை நாடு இழந்துவிட்டது: தேசியக் கூட்டணி தலைவர்கள்

கோலாலம்பூர்:

எளிமையான மதிப்புகளுடன் மக்களின் அடையாளத்தை வடிவமைத்த ஒரு அரசியல் தலைவரை நாடு இழந்துவிட்டது என்று தேசியக் கூட்டணி தலைவர்கள் கூறினர்.

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் மறைவுக்கு தேசியக் கூட்டணியில் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துன் அப்துல்லாவை எளிய மதிப்புகளுடன் மக்களின் அடையாளத்தை வடிவமைத்த ஒரு அரசியல் தலைவர்.

நாட்டை வளர்த்து, தூய்மையான மற்றும் எளிமையான மதிப்புகளுடன் மக்களின் அடையாளத்தை வடிவமைத்த ஒரு அரசியல் தலைவரை நாடு இழந்துவிட்டது என்று  பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ  அஸ்மின் அலி கூறினார்.

மறைந்த துன் படாவி நாட்டின் வரலாற்றுப் பதிவுகளிலும், மக்களின் நினைவுகளிலும் அதிகாரம் மிக்க, நேர்மையான, மரியாதைக்குரிய, தகுதியான, அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக நிலைத்திருப்பார்.

பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset