நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா கெஅடிலான் தேர்தலில் 3 மக்கள் பிரதிநிதிகள் தோல்வி: சுங்கை சிப்புட்டில் நோவிந்தன் வெற்றி

ஈப்போ:

பேரா கெஅடிலான் தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மூன்று பிரதிநிதிகள் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

பேரா மாநிலத்தில் 2025-2028 காலத்திற்கான  கெஅடிலான் கட்சி தொகுதி  தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், சுங்கை சிப்புட் தொகுதி தலைவர் பதவியை தற்காக்க தவறி விட்டார்.

கடும் போட்டிகளுக்கு மத்தியில் அந்த தொகுதியில் கே. நோவிந்தன் 389 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர்  32 வாக்குகள் பெரும்பான்மையுடன் இந்த வெற்றியை கைப்பற்றினார்.

உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அராபத் வருசை மஹமத் தம்பூனில் ஷம்சுல் கமர் அனியிடம் 1,233 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். ஷம்சுல் 1,458 வாக்குகளைப் பெற்றார்.

மேலும் ஊந்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வசந்தியும் தோற்கடிக்கப்பட்டார்,

அவர் பாகன் டத்தோ தொகுதி  தலைவர் பதவியை தற்போதைய ஆர். மனோகரனிடம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset