
செய்திகள் மலேசியா
ஒன்றாக மலரும் புத்தாண்டுகள் அனைவருக்கும் நன்மை பயக்கும் என நம்புகிறேன்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
ஒன்றாக மலரும் புத்தாண்டுகள் அனைவருக்கும் நன்மை பயக்கும் என நம்புகிறேன்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறினார்.
இந்துக்கள் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டு, சீக்கியர்கள் கொண்டாடும் வைசாக்கி, மலையாள வம்சாவளியினர் கொண்டாடும் விஷு அசாம்ஷங்கள் என அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்துக்களின் மரபு தொட்ட பெருமைகளைத் தாங்கி வரும் சித்திரைப் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும்.
அனைவருக்கும் நல்லதைத் தரும் ஒரு பொன்னான ஆண்டாக மலர வேண்டும்.
புதிய நம்பிக்கைகளை விதைத்து, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும், மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் நிரம்பி இருக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒற்றுமை, சமூகத்தில் அன்பும் அமைதியும் நிரம்பி வாழ வேண்டும் எனவும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
விசுவாவசு வருடம் உங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் கொண்டுவர இறைவனை வேண்டுகிறேன். இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வசந்த காலத்தின் வண்ணமயமான தென்றலோடு மலர்ந்து வரும் விஷு பண்டிகை, மலையாளிகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருநாளாகத் திகழ்கிறது.
இந்தப் புதிய ஆண்டின் தொடக்கம், புதிய நம்பிக்கைகள், இலக்குகள் மற்றும் ஆற்றல்மிக்க துவக்கங்களின் அஸ்திவாரமாக அமைகிறது.
விஷு என்பது விழிப்புணர்வை ஏற்படுத்தும் புனித நாளாகவும், மனமகிழ்வோடு குடும்பத்தினருடன், உறவுகளுக்கிடையிலான பாசத்தையும் மகிழ்ச்சியையும் வலுப்படுத்துகிறது. இனிய விஷு அசாம்ஷங்கள்.
சீக்கிய சமுதாயத்தினருக்கு வைசாக்கி என்பது புத்தாண்டின் ஆரம்பத்தைக் குறிக்கும் ஒரு மகத்தான நாளாக அமைகிறது.
இது விவசாய அறுவடைக் காலத்தையும் குறிக்கிறது. பக்தியும், சிந்தனையும், சமூக ஒற்றுமையையும் கொண்டாடும் இந்த நாள், சீக்கியர்களின் ஆன்மிக அகவாழ்வையும், சமூக பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்த வைசாக்கி விழா, உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை, ஆனந்தம், ஒளி, மற்றும் உன்னத இலக்குகளை நோக்கிச் செல்லும் ஆற்றலை தரட்டும்.
அனைவருக்கும் அமைதியும் வளமையும் நல்கும் புத்தாண்டாக இது அமைய வாழ்த்துகிறேன். இனிய வைசாக்கி நல்வாழ்த்துகள்.
ஆக ஒன்றாக மலரும் இந்த புத்தாண்டுகள் நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றாகப் பயணிப்போம். ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 12:52 pm
பதவி விலகியதில் அவருக்கு எந்த பிரசிச்னையும் இல்லை: பாக் லாவை உதாரணமாக கொள்ளுங்கள்: துன் மகாதீர்
April 15, 2025, 11:05 am
துன் அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி
April 14, 2025, 11:52 pm
அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் என்னை வழிநடத்திய ஒரு தந்தை துன் அப்துல்லா படாவி: இஸ்மாயில் சப்ரி
April 14, 2025, 11:50 pm
கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவராக ராஜன் முனுசாமி அமோக வெற்றி
April 14, 2025, 11:48 pm
பேரா கெஅடிலான் தேர்தலில் 3 மக்கள் பிரதிநிதிகள் தோல்வி: சுங்கை சிப்புட்டில் நோவிந்தன் வெற்றி
April 14, 2025, 11:23 pm