நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதவி விலகியதில் அவருக்கு எந்த பிரசிச்னையும் இல்லை: பாக் லாவை உதாரணமாக கொள்ளுங்கள்: துன் மகாதீர்

கோலாலம்பூர்: 

நாட்டின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி மறைந்ததையடுத்து அவருக்கு நாட்டு தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அவ்வகையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அப்துல்லாஹ் படாவிக்கு இன்று காலை இறுதி மரியாதை செலுத்தினார். 

கடந்த 2003ஆம் ஆண்டு துன் மகாதீரிடமிருந்து அப்துல்லாஹ் படாவி பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டார். 

எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அவர் 2009ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பதவி விலகியதில் அவருக்கு எந்த பிரசிச்னையும் இல்லை. அவரை அனைத்து அரசியல்வாதிகள் முன் உதாரணாமாக கொள்ள வேண்டும் என்று துன் மகாதீர் புகழாரம் சூட்டினார். 

துன் டாக்டர் மகாதீர் ஒரு கறுப்பு நிற மலாய் பாரம்பரிய ஆடையுடன் வருகை தந்தார். அவருடன் அவரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா அலி, மகன் முக்ரிஸ் துன் மகாதீர் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர். 

துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை நாட்டின் ஐந்தாவது பிரதமராக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset