
செய்திகள் மலேசியா
சட்டவிரோத ஆலயம் என முத்திரை குத்த வேண்டாம்: இனவாதத்திற்கு அரசு முடிவு கட்ட வேண்டும்: டத்தோ டி.மோகன்
பூச்சோங்:
நாட்டில் உள்ள ஆலயங்களை யாரும் சட்டவிரோத ஆலயம் என முத்திரை குத்த வேண்டாம்.
பூச்சோங் கேம்ப் விலேஜ் மஇகா கிளைத் தலைவர் டத்தோ டி.மோகன் இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு இனத்துவேசம் தலைத் தூங்கியுள்ளது.
சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட இந்து ஆலயங்களை இப்போது சட்டவிரோத ஆலயங்கள் என்று முத்திரை குத்தப்படுவது கண்டிக்கத்தக்கது
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன், போலிஸ் துறையினர் இது தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கமும் அதிகாரமும் உங்கள் கையில் இருப்பதால் இதற்கு முடிவு கட்ட வேண்டும்
தோட்டங்களில் வாழ்ந்த இந்தியர்கள் ஆலயங்களை கட்டி வழிபட்டு வந்தனர்.
இப்போது தோட்டங்கள் துண்டாடப்பட்டுள்ளன.
இதனால் இந்த ஆலயங்களை சட்டவிரோத ஆலயங்கள் என்று சமூக வலைத் தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இவர்களின் அகப்பக்கத்தை அரசாங்கம் உடனே முடக்க வேண்டும்
இன்று பூச்சோங்கில் ஐந்து கிளைக் கூட்டங்கள் ஓரே நேரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின் டத்தோ டி.மோகன் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
பூச்சோங் தொகுதி தலைவர் முருகன், பூச்சோங் பிரிமா கிளைத் தலைவர் லெட்சுமி பிரபா, பூச்சோங் இண்டா கிளைத் தலைவர் சிவகாமி, தாமான் ஸ்ரீ ராமாய் கிளைத் தலைவர் அமிர்தராஜ், தாமான் ரூமா மூரா கிளைத் தலைவர் இந்திரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
மஇகா கோத்தா ராஜா தொகுதி துணை தலைவர் செளந்தரராஜன் தலைமையகத்தின் சார்பில் கிளைக் கூட்டங்களை நடத்தி வைத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 12:52 pm
பதவி விலகியதில் அவருக்கு எந்த பிரசிச்னையும் இல்லை: பாக் லாவை உதாரணமாக கொள்ளுங்கள்: துன் மகாதீர்
April 15, 2025, 11:05 am
துன் அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி
April 14, 2025, 11:52 pm
அரசியலிலும் அரசாங்க நிர்வாகத்திலும் என்னை வழிநடத்திய ஒரு தந்தை துன் அப்துல்லா படாவி: இஸ்மாயில் சப்ரி
April 14, 2025, 11:50 pm
கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவராக ராஜன் முனுசாமி அமோக வெற்றி
April 14, 2025, 11:48 pm
பேரா கெஅடிலான் தேர்தலில் 3 மக்கள் பிரதிநிதிகள் தோல்வி: சுங்கை சிப்புட்டில் நோவிந்தன் வெற்றி
April 14, 2025, 11:23 pm