நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் பாடாங் தேம்பாக் ஸ்ரீ முனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது

சுபாங்:

கம்போங் பாடாங் தேம்பாக் ஸ்ரீ முனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவர் ரகுபதி இதனை கூறினார்.

கடந்த காலங்களில் எங்களின் முன்னோர் ஒரு கல்லை காவல் தெய்வமாக வைத்து வணங்கி வந்தனர்.

அந்த கல்லின் வாயிலாக தான் இன்று வரை முனிஸ்வரர் இங்கு நிலை நிற்கிறார் என மக்கள் நம்பி வணங்கி வருகின்றனர்.

தற்போது மூன்றாவது தலைமுறையின் கீழ் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றது.

இளைஞர்கள் சுற்று வட்டார மக்களின் ஆதரவில் திருப்பணி முடிந்து இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

இதை தொடர்ந்து அடுத்த 48 நாட்களுக்கு நடைபெறும் மண்டலப் பூஜை நடைபெறும். இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

கும்பாபிஷேக விழா போன்று வருடாந்திர திருவிழாவில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று ரகுபதி கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset