
செய்திகள் மலேசியா
எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநராக எனது பயணத்தை மிகுந்த பெருமிதத்துடனும் நன்றியுடனும் நிறைவு செய்கிறேன்: டத்தோ வீரா ஷாகுல் தாவூத்
கோலாலம்பூர்:
மனிதவள அமைச்சின் எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநராக எனது பயணத்தை மிகுந்த பெருமையுடனும் நன்றியுடனும் நிறைவு செய்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகள் உண்மையிலேயே நிறுவனத்திற்கும் எனக்கும் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இது துணிச்சலான லட்சியம், தீர்க்கமான நடவடிக்கை, வாழ்வின் அர்த்தமுள்ள பயணமாகும்.
நான் முதன் முதலில் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது எச்ஆர்டி கோர்ப்பை மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டிற்கான ஒரு தெளிவான குறிக்கோளால் உந்தப்பட்டேன்.
இன்று அந்த பணியை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் நான் கற்பனை செய்து பார்க்க முடியாத வழிகளில் அதை மீறி எச்ஆர்டி கோர்ப்பை மேம்படுத்திய பெருமிதத்துடன் நான் வெளியேறுகிறேன்.
எச்ஆர்டி கோர்ப்பில் நாங்கள் அடைந்த மைல்கற்கள் பல. அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்:
- நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் இரட்டிப்பாகி, 2024 இல் 4 பில்லியன் ரிங்கிட்டை தாண்டின. 2020 முதல் 101% அதிகரிப்பை எட்டியது.
- லெவி வரி வசூல் 2.32 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது. மானிய ஒப்புதல்கள் 2.28 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்தன. இது வலுவான 98% பயன்பாட்டு விகிதத்தை பிரதிபலிக்கிறது.
- இந்த ஆண்டு பணியாளர் மேம்பாட்டில் எங்கள் தலைமையை வலுப்படுத்தும் வகையில், ஆசியான் திறன் ஆண்டை நடத்துவதில் எச்ஆர்டி கோர்ப் பெருமை கொள்கிறது.
- தொழில்துறை ஈடுபாட்டை உயர்த்திய, பயிற்சிக்கான அணுகலை விரிவுபடுத்திய, தேசிய திறமை சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்திய முக்கியமான கொள்கை மேம்பாடுகளை நாங்கள் மேற்கொண்டோம்.
- ஒரு விரிவான டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் சேவைகள் வழங்கப்படுவதை மேம்படுத்தினோம். செயலாக்க நேரங்களை விரைவுபடுத்தினோம். மேலும் கணிசமாக மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தையும் உயர்த்தினோம்.
இந்த செயல்பாட்டு வெற்றியை விட அதிகமாக அவை பிரதிபலிக்கின்றன. செயல்முறைகள், தொழில்நுட்பம் மூலம் எச்ஆர்டி கோர்ப் எவ்வாறு தாக்கத்தை வழங்குகிறது என்பதில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் குறிக்கின்றன.
இலக்கவியல் கண்டுபிடிப்பு, கொள்கை செல்வாக்கிலிருந்து பங்குதாரர் ஈடுபாடு, செயல்திறனை தொடர்ச்சியாக நாங்கள் மேம்படுத்தினோம்.
இந்த மாற்றத்தை வழிநடத்தியதற்கும், மலேசியாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாகிய அதன் மக்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்.
மேலும் எதிர்காலத்திற்குத் தயாராக, மீள்தன்மை கொண்ட ஒரு நிறுவனத்தை வடிவமைப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதற்கும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
எங்களது உள்நாட்டு, அனைத்துலக பங்குதாரர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் தொலைநோக்குப் பார்வையில் உங்கள் நம்பிக்கை, உறுதியான கூட்டாண்மை இந்த சாதனைகளை சாத்தியமாக்கியது. நான் அந்த நினைவுகளை எப்போதும் அதை என்னுடன் எடுத்துச் செல்வேன்.
புதிய முயற்சிகளுக்காக முன்னேறும்போது புதுப்பிக்கப்பட்ட நோக்கம், நம்பிக்கையுடன் அதை முழுமனதுடன் நான் செய்தேன். இந்தப் பணி தொடர்கிறது.
இப்போது அதை வழிநடத்துபவர்களின் திறமையான கைகளில் அது இன்னும் செழித்து வளரும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
எச்ஆர்டி கோர்ப் வாயிலாக சேவை செய்யவும், வழிநடத்தவும், கட்டமைக்கவும் வாய்ப்பளித்ததற்கு இறைவனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2025, 9:11 pm
பேச்சு சுதந்திரம் போய்விட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்: துன் மகாதீர்
April 16, 2025, 8:20 pm
பிறை இல்லாத தேசியக் கொடி ஏற்றுக் கொள்ள முடியாதது: மாமன்னர்
April 16, 2025, 8:10 pm
சின் சியூ செய்தித்தாள் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு: உள்துறை அமைச்சு உத்தரவு
April 16, 2025, 2:08 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
April 16, 2025, 2:06 pm
சிங்கப்பூரில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தவருக்குச் சிறை
April 16, 2025, 2:05 pm
கெஅடிலான் கட்சித் தேர்தலில் பண அரசியலா?; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: பிரபாகரன்
April 16, 2025, 2:05 pm
பிறை இல்லாத தேசியக் கொடி: கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஸ்லி மாலிக்
April 16, 2025, 2:04 pm