நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி மறைவு: பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா இரங்கல் 

கோலாலம்பூர்: 

மலேசிய நாட்டின் ஐந்தாவது பிரதமராக பொறுப்பு வகித்த துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி நேற்றிரவு தலைநகர் தேசிய இருதய கழகத்தில் காலமானார். 

அவரின் மறைவுக்குப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா இருவரும் இரங்கல் செய்தியை வெளியிட்டனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக அன்னாரின் சேவை அளப்பரியதாகும். துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவியின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார். 

அப்துல்லாஹ் அஹ்மத் படாவி நேற்று இரவு 7.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 85 ஆகும். 

1939ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பினாங்கு பாயான் லெபாஸ் பகுதியில் அப்துல்லாஹ் படாவி பிறந்தார். 1978 முதல் 2008ஆம் ஆண்டு வரை கெப்பாலா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிருந்தார் 

மேலும், நாட்டின் ஐந்தாவது பிரதமராக 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்திருந்தார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset