நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூகுளுடன் இணைந்து மாணவர்களிடையே ஏஐ திறனை மேம்படுத்துவதே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்கு: சுரேன் கந்தா

கோலாலம்பூர்:

கூகுளுடன் இணைந்து மாணவர்களிடையே ஏஐ திறனை மேம்படுத்துவதே ஸ்ரீ முருகன் கல்வி  நிலையத்தின்  இலக்காக கொண்டுள்ளது.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.
 
கல்வியுடன் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை ஸ்ரீ முருகன்  கல்வி நிலையம் மேர்கொண்டு வருகிறது.

தற்போது  கூகுள் மலேசியாவுடன் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இணைந்துள்ளது.

இந்த கூட்டணியின் வாயிலாக மாணவர்களுக்கு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்று பேசிக் கொண்டு இருந்தால் எதையும் சாதிக்க முடியாது.

செயல்முறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சுரேன் கந்தா கூறினார்.

செயற்கை நுண்ணறிவு திறன் ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்களை தவிர்த்து தமிழ் பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எங்களின் திட்டமாக உள்ளது.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset