நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறையின் சீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக அரசாங்கம் பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கும்: டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் 

தாப்பா: 

நாட்டின் தேசிய நீதித்துறையின் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக அரசாங்கம் திறந்த மனத்துடன் பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கும் என்று தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார் 

நாட்டின் தலைமை நீதிபதி நியமிக்கும் விவகாரங்கள் குறித்தும் பொதுமக்கள் அரசாங்கத்திடம் கருத்துகளை முன்வைக்கலாம் என்று மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார் 

நடப்பு மடானி அரசாங்கம் ஆட்சியை ஏற்றது முதல் 80 சட்டங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. அதில் நடப்பில் உள்ள சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார் 

நீதித்துறையும் மக்களாட்சி நடைமுறையையும் சீர்மிகு பாதைக்குக் கொண்டு செல்லும் அரசாங்கத்தின் முயற்சியை இது காட்டுவதாக உள்ளது என்று லெம்பா பந்தாய் எம்பியுமான அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset