நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் கம்போங் ரயில்வே மக்களின் வீட்டுப் பிரச்சினை கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்வேன்: பிரபாகரன்

கோலாலம்பூர்:

செந்தூல் கம்போங் ரயில்வே மக்களின் வீட்டுப் பிரச்சினை கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்வேன்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாபரன் இதனை கூறினார்.

செந்தூல் கம்போங் ரயில்வே வீடுகள் உடைக்கும் போது அங்கு கூட இருந்த மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த வீடுகள் கட்டித் தரப்படும் என மேம்பாட்டு நிறுவனத்தால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.

ஆனால் 10 ஆண்டுகளாகியும் அந்த மக்களுக்கான வீடுகள் கட்டித் தரப்படவில்லை.

இதனால் பொறுமை இழந்த மக்கள் இன்று சாலையில் இறங்கி சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக போர் கொடிக் தூக்கியுள்ளனர்.

அதை வேளையில் என்னை அழைத்து மகஜர் ஒன்றையும் கொடுத்தனர்.

என்ன மகஜிரில் உள்ள மக்களின் கோரிக்கையை கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்வேன்.

மேலும் கூட்டரசுப் பிரதேச அமைச்சு, டிபிகேஎல், மேம்பாட்டு நிறுவனம்,
பொதுமக்கள் ஆகியவற்றுடன் சந்திப்பு கூட்டத்திற்கு ஒன்றும் ஏற்பாடு செய்யப்படும்.

இதன் மூலம் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படும் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset