
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங்கை தேசிய முன்னணி தற்காக்கும்; அதிக பெரும்பான்மையை பெறுவது கடினம்: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணியை மீண்டும் தற்காக்கும்.
ஆனால் அதிக பெரும்பான்மையை பெறுவது கடினம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தேசிய முன்னணி ஆயிர் கூனிங் சட்டமன்ற தொகுதியை தக்க வைத்துக் கொள்ளும்.
ஆனால் எதிராளியின் பலம் காரணமாக பெரும்பான்மையை அதிகரிக்கும் இலக்கு கடினமாக இருக்கலாம்.
நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கு பின் மக்கள் இப்போது தான் வேலைக்கு திரும்பியுள்ளனர்.
இதனால் அவர்கள் மீண்டும் வாக்களிப்பதற்காக தாப்பா வருவர்களா என்பது கேள்விக்குறி தான்.
இது அதிக வாக்குகளை பெறுவதில் கவலையை அளிக்கிறது.
கடந்தாண்டு ஆயிர் கூனிங்கில் தேசிய முன்னணி வேட்பாளர் 2,313 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
இம்முறை ஒற்றுமை அரசாங்கம், நம்பிக்கை கூட்டணி ஆதரவால் இந்த பெரும்பான்மை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் வாக்காளர்களின் எண்ணிக்கை தான் தற்போது கவலையளிக்கும் வகையில் உள்ளது.
இதனால் தான் தேசிய முன்னணி வெற்றி பெறும் என்று நான் நம்பிக்கையுடன் சொன்னேன்.
ஆனால் பெரும்பான்மை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
இருந்தாலும் தேசிய முன்னணி வெற்றிக்காக மஇகா கடுமையாக உழைக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 6:32 pm
அம்னோ நில விவகாரத்தில் புவாட் ஷர்காஷி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: துன் மகாதீர்
April 18, 2025, 3:33 pm
போர்டிக்சன் அருகே பயங்கர சாலை விபத்து: கல்லூரி மாணவர் பலி, ஐவர் படுகாயம்
April 18, 2025, 2:43 pm
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வாக்காளர்களை கவர தேசிய முன்னணி முயற்சிக்கும்: ஹசான்
April 18, 2025, 10:31 am
மலேசியாவில் முதலீடு செய்ய தாய்லாந்து கூட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு
April 18, 2025, 10:27 am