நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

12 ஆண்டுகள் ஆகியும் வீடுகள் கட்டி தரப்படவில்லை: மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக செந்தூல் கம்போங் ரயில்வே மக்கள் போர்க் கொடி

கோலாலம்பூர்:

12 ஆண்டுகள் ஆகியும் வீடுகள் கட்டி தரப்படவில்லை என்பதால் மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக  செந்தூல் கம்போங் ரயில்வே மக்கள் போர்க் கொடி. தூக்கியுள்ளனர்.

செந்தூல்  கேடிஎம் குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கு 42,000 வெள்ளியில் மாடி வீடுகள் கட்டித் தருவதாக மேம்பாட்டு நிறுவனம்  வாக்குறுதி வழங்கியது.

ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் வீடுகளை கட்டி தரவில்லை என்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் கேடிஎம் குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கு 21 மாடிகள் கொண்ட வீடுகளை கட்டி தருவதாக ஓய்டிஎல் நிறுவனம் வாக்குறுதி கொடுத்தது.

மூன்று ஆண்டுகளில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று மேம்பாட்டு நிறுவனம் வாக்குறுதி கொடுத்தது என்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி ஈஸ்வரி தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆனால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற விளம்பர அறிவிப்பு பலகை அப்படியே உள்ளது.

ஆனால் இதுவரை எந்தவொரு வீடும் கட்டப்படவில்லை என்று அவர் சொன்னார்.

எங்களுக்கு வாக்குறுதி கொடுத்த இடத்தில் வீடுகள் கட்டப்படவில்லை.

மாறாக வேறு இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளில் குடியேறும் படி மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டது. ஆனால் இந்த புதிய வீடுகளை பார்க்க அனுமதி இல்லை.

நிபந்தனை அடிப்படையில் வீடுகளை தருகிறோம் என்று நிறுவனம் கூறுகிறது. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்களிடம் மகஜரை வழங்கினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset