நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு, கிளந்தானில் இன்று மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டம்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்கிறார் 

கோலாலம்பூர்; 

இன்று பினாங்கு, கிளந்தான் மாநிலத்தில் நடைபெறும் மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்கிறார் 

கிளாந்தான் பச்சோக்க்கிலும் பினாங்கு பத்தவர்த் பகுதிகளிலும் இந்த மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது 

நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக கிளந்தான் மாநில மந்திரி பெசார் டத்தோ முஹம்மத் நசீருடின் உடன் ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் மடானி நோன்பு பெருநாள் நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோ இருவரும் பிரதமர் அன்வாரை வரவேற்பார்கள் 

இந்த மடானி நோன்பு பெருநாள் கொண்டாட்டம் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை மேலோங்க செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset