நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஆலம் வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை ஆடவர் மரணம்: நாயுடன் உடல் மீட்பு

ஷாஆலம்:

ஷாஆலமில் ஏற்பட்ட  வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை ஆடவர் மரணம்.

அவ்வாடவரின் உடல் நாயுடன் மீட்கப்பட்டது என்று ஷாஆலம் போலிஸ் தலைவர் முகமத் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

தாமான் அலம் இந்தாவில் உள்ள ஒரு கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடையில் வெள்ளம் ஏறியது.

இந்த வெள்ள நீரில் மிதந்த நிலையில் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது.

இலங்கையைச் சேர்ந்த அவ்வடவரும்  நாயும் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதே வேளையில் கம்போங் பாடாங் ஜாவாவில் மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்பப்படும் மற்றொரு உடல் 
கண்டெடுக்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் 24 வயதான உள்ளூர் ஆடவர் ஒரு மாடி வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

கைத்தொலைபேசி சார்ஜர் போட்டதால் அவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்தர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset