
செய்திகள் மலேசியா
மலேசிய இந்திய பட்டதாரிகள் மன்றம் அமைக்கும் நோக்கில் மாபெரும் அளவில் பட்டதாரிகளுக்கான மாநாடு: உமா காந்தன்
கோலாலம்பூர்:
இந்திய பட்டதாரிகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் சார்ந்த அறிவையும், அனுபவத்தையும் பெறுவதற்கு ஏதுவாக மிகப்பெரிய மாநாடு ஒன்று தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைவன் என்ற தலைப்பிலான இந்த மாநாடு இம்மாதம் 26,27 ஆகிய
தேதிகளில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று புரட்சி இயக்கத்தின் தலைவர் உமா காந்தன் கூறினார்.
சமூகத்தில் மாற்றத்தையும். மேம்பாட்டையும் கொண்டு வரக்கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள் பட்டதாரிகள்.
இவர்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல் பற்றி முழுமையாக அறிந்திருப்பது மிக அவசியம். இந்த மாநாடு இந்த நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றும்.
வாழ்க்கையில் நமக்குத் தேவையானவை இந்த மூன்று அம்சங்கள். இவற்றைப் பற்றி இத்துறைகளில் அனுபவம் பெற்றவர்கள் இந்த மாநாட்டில் பேசுவார்கள்.
பட்டதாரிகள் தங்களின் கருத்துகளைப் பறிமாறிக் கொண்டு மேற்கண்ட துறைகள் சார்ந்த ஐயப்பாடுகளுக்குத் தெளிவை ஏற்படுத்தும் ஒரு தளமாக இது அமைந்திருக்கும் என்று இங்குள்ள பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விவரித்தார்.
பிரதமர் துறையின் ஆதரவோடு புரட்சி மற்றும் ஐசெட் ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
இதுவரை 450 மாணவர்கள் பதிந்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் இருந்து பட்டதாரிகள் வரவேற்கப்படுகிறார்கள்.
போக்குவரத்து, தங்குமிடம் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.
அங்கீகாரம் பெறாத உயர்கல்வி நிலையங்களில் படித்த மாணவர்கள், கல்வி கடனுதவியைப் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்கள் என பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விழையும் பட்டதாரி மாணவர்கள் இதில் பங்கேற்றுப் பயனடைய அழைக்கப்படுகின்றனர்.
இந்த மாநாட்டின் வாயிலாக அமைக்கப்படும் பட்டதாரிகள் மன்றம் பட்டதாரிகளின் உருமாற்றத்திற்குப் புதியதொரு தொடக்கமாக அமையும் என்றும் உமா காந்தன் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்புக்கு உமா காந்தன் 016-6027487.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 6:32 pm
அம்னோ நில விவகாரத்தில் புவாட் ஷர்காஷி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: துன் மகாதீர்
April 18, 2025, 3:33 pm
போர்டிக்சன் அருகே பயங்கர சாலை விபத்து: கல்லூரி மாணவர் பலி, ஐவர் படுகாயம்
April 18, 2025, 2:43 pm
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வாக்காளர்களை கவர தேசிய முன்னணி முயற்சிக்கும்: ஹசான்
April 18, 2025, 10:31 am
மலேசியாவில் முதலீடு செய்ய தாய்லாந்து கூட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு
April 18, 2025, 10:27 am