
செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் 5 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன
ஷாஆலம்:
சிலாங்கூரில் இன்று காலை 1 மணி முதல் இடைவிடாமல் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
பெட்டாலிங், கிள்ளான், சிப்பாங், உலு லங்காட், கோம்பாக் ஆகிய 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் இயக்குநர் கசாலி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
பெட்டாலிங்கில் கம்போங் கோல சுங்கை பாரு, கம்போங் தெங்கா, கம்போங் பாரு ஹைகோம், கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் பத்தாங் ஜாவா, பெடரல் ஹைவே மோட்டார் சைக்கிள் பாதை ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
கிள்ளானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் புக்கிட் பாயுங், தாமான் டாயா, பெக்கான் மேரு, தாமான் முத்தியாரா, தாமான் ஸ்ரீ மூடா ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதே போன்று சிப்பாங்கிலும் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்