நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 10 விழுக்காடு லாப ஈவு: தலைவர் பாலசுந்தரம் அறிவிப்பு

பத்துகேவ்ஸ்:

மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கத்தின் 29 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு இன்று காலையில் பத்துகேவ்ஸ் ஷங்கா மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பாலசுந்தரம் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

உறுப்பினர்கள் தேவையை பூர்த்தி செய்ய பயனீட்டாளர் கூட்டுறவு வழி கடன் பெற்று தந்துள்ளோம். மேலும் மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு 1,380,000 ரிங்கிட்டை பயனீட்டாளர் கூட்டுறவில் பங்கு தொகையை உறுப்பினர்கள் முதலீட்டோடு அதிகரித்தது என்று கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பாலசுந்தரம் குமாரசாமி தெரிவித்தார்.

இதன் மூலம் கடந்த ஆண்டுக்கான பங்கு மூலதனத்திற்கு ( மொத்த பங்கு 1,630,000) 15% விழுக்காடு இலாப ஈவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதன் வழி உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

தற்போது 2,143 உறுப்பினர்கள் மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு உறுப்பினர்களுக்கு பத்து விழுக்காடு லாப ஈவு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

மலேசிய இந்து யாத்திரை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் நலன் கருதி மரணம் அடையும் உறுப்பினர்கள் குடும்பத்திற்கு 500 ரிங்கிட் மரண சகாய நிதி, எஸ்பிஎம் தேர்வில் 7ஏ மேல் பெறும் உறுப்பினர்கள் பிள்ளைகளுக்கு 300 ரிங்கிட், எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்பு பெறும் மாணவர்களுக்கு 350 ரிங்கிட், இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் உறுப்பினர்களுக்கு 500 ரிங்கிட், திருமணம் செய்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு 500 ரிங்கிட்டையும் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset