நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவில் ஹராம் எனக் கூறுவதை நிறுத்த வேண்டும்; ஆலய நிலப்பட்டா பிரச்சினைக்கு தீர்வுக் காண இதுவே சரியான நேரம்: டத்தோ சிவக்குமார்

பத்துமலை:

கோவில் ஹராம் எனக் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் வலியுறுத்தினார்.

பத்துமலை திருத்தலத்தில் இன்று கந்த சஷ்டி கவசப் பாராயணம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் ஆதரவுடனும் அதன் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா தலைமையிலும் இவ்விழா நடைபெற்றது.

மஹிமாவும் டிஎஸ்கே குழுமமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்தது.

மே 1 தொழிலாளர் தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதே வேளையில் வரும் காலங்களில் கந்த சஷ்டி கவசப் பாராயணம் இன்னும் விமரிசையாக நடைபெறும் என்று டான்ஸ்ரீ நடராஜா அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் இவ்விழா அடுத்தாண்டு இன்னும் சிறப்பாக நடைபெறும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

நாட்டில் கோவில் ஹராம் என்று கூறி இந்துக்களின் மனதை புண்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இதை தடுக்க வேண்டும் என்பது தான் மஹிமாவின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் ஆலயங்களின் நிலப்பட்டா பிரச்சினைக்கு தீர்வுக் காண இது தான் சிறந்த நேரமாக உள்ளது.

காரணம் பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் ஒவ்வொரு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி இந்த ஆலய பிரச்சினைக்கு தீர்வு கண்டு கொடுங்கள் என வலியுறுத்துங்கள்.

அப்படி அவர் செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அவருக்கு நிரூபித்து காட்டுங்கள்.

இதுதான் சிறந்த வழியாகும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset