
செய்திகள் மலேசியா
சென்னையில் 6ஆவது அனைத்துலக சைவ சிந்தாந்த மாநாடு; மலேசியாவிலிருந்து 70 பேராளர்கள் பங்கேற்பு: டான்ஶ்ரீ நடராஜா
பத்துமலை:
ஆறாவது னைத்துலக சைவ சிந்தாந்த மாநாடு மலேசியாவிலிருந்து 70 பேராளர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவரும் அனைத்துலக பேராளர்களுக்கு தலைமையேற்றுள்ள டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.
அனைத்துலக சைவ சிந்தாந்த மாநாடு வரும் மே 3, 4, 5ஆம் தேதிகளில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
உலகின் பல நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறிப்பாக நான் நான்காவது முறையாக இந்த அனைத்துலக சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்கிறேன்.
இம்முறை எனது தலைமையில் மலேசியாவில் இருந்து 70 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதே வேளையில் இம்மாநாட்டின் நான் வாழ்த்துரை வழங்கவுள்ளேன்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
மேலும் தேவஸ்தான அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ சிவக்குமார் இம்மாநாட்டில் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் இதுபோன்ற சைவ சிந்தாந்த மாநாடுகளை நடத்துவதுடன் அனைத்துலக மாநாட்டுகளிலும் கலந்து கொள்கிறது.
ஆனால் மற்ற இயக்கங்கள் இதுபோன்ற மாநாடுகளில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm