
செய்திகள் மலேசியா
நம்மோடு இருப்பார் என்ற நம்பிக்கையில் இந்திய சமூகம் வாக்களித்தது; ஆனால் நிலைமை மாறிவிட்டது: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
தலைவனாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தலைவனோடு இருக்க வேண்டும் என்ற நிலை மாறி விட்டது.
இப்போது தலைவர் நம்மோடு இருக்கிறாரா என்பது தான் முக்கியம் மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
தற்போது எதை பேசினாலும் தெளிவாக பேச வேண்டும்.
காரணம் நம்மோடு இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் இந்திய சமூகம் வாக்களித்தது.
ஆனால் இப்போது நிலைமை முழுமையாக மாறி விட்டது. அவரை குறை சொல்லியும் ஒன்றும் இல்லை.
காரணம் அவர் பல்லின மக்களை பிரதிநிதிக்கிறார்.
ஆக இதுபோன்ற தலைவர்கள் விவகாரத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
மஇகா கெப்போங் தொகுதி கோலாலம்பூர் கல்வி புத்தாக்க ஆன்மா இயக்கத்துடன் இணைந்து நடத்திய கல்வியும் கருணையும் நிகழ்ச்சியில் பேசிய டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
கெப்போங் தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தியும் தேவேந்திரனும் தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகின்றனர்.
குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் மூலம் பள்ளி மாணவர்களுக்கும் வசதிக் குறைந்த மக்களுக்கும் உதவுகின்றனர்.
சாதாரணமான நிலையில் உள்ளவர்களுக்கு தான் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
இதனால் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 6:06 pm
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2025, 5:09 pm
அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தில் திருத்தம்; அக்டோபர் மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும்: ஃபஹ்மி
April 30, 2025, 5:09 pm
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மெத்தனமாக இருக்க வேண்டாம்: பிரதமர் எச்சரித்தார்
April 30, 2025, 5:04 pm