
செய்திகள் மலேசியா
கோலாலம்பூரில் தொழிலாளர் தின பேரணி: 1,500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
கோலாலம்பூர்:
தலைநகரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணியில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சிறந்த தொழிலாளர் உரிமைகள், சீர்திருத்த கோரிக்கைகளை முனைத்து இப்பேரணி தலைநகர் பசார் செனியில் நடைபெற்றது.
பெரும்பாலும் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற உடையணிந்த மக்கள் அங்கு கூடினர்.
காலை 9.30 மணியளவில் ஒன்றுகூடத் தொடங்கி, பின்னர் டத்தாரான் மெர்டேக்காவை நோக்கி பேரணி சென்றது.
வழியில் இளைஞர்கள் ஊதியத்துடன் கூடிய பயிற்சிகளை விரும்புகிறார்கள், பசியால் வாடாமல் வாழ ஊதியம் போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு நியாயமான சிகிச்சை அளிக்கக் கோரும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
மேலும் தொழிலாளர்கள் நாட்டின் தூண்கள்: சம்பளத்தை உயர்த்துங்கள், சுமைகளை அல்ல என்ற கருப்பொருளுடன் இப்பேரணி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm