நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் வந்தார், மந்திரி புசார் வந்தார், ஆனால் பத்துமலை மின் படிக்கட்டு திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை: டான்ஸ்ரீ நடராஜா வேதனை

பத்துமலை:

பிரதமர் வந்தார், மந்திரி புசார் வந்தார். ஆனால் பத்துமலை மின் படிக்கட்டு திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

பத்துமலை மேல் குகைக்கு செல்ல மின் மடிக்கட்டு கட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த தைப்பூச விழா காலக்கட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி ஆகியோர் பத்துமலைக்கு வந்தனர்.

அவர்களிடம் இத் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.

ஆனால் இன்று வரை அத் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி மின் படிக்கட்டு கட்ட முடியும்? என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

குறிப்பாக அடுத்த தைப்பூச விழாவிற்கு படி ஏற முடியாதவர்கள் எப்படி மேல்குகைக்கு செல்வார்கள்.

ஆகவே, இவ்விவகாரத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இத் திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset