
செய்திகள் மலேசியா
மற்றவர்கள் நிலத்தில் கோவில்கள் ஹராமாக இல்லை; ஆலயங்கள் இருந்த நிலங்கள் தான் கைமாறின: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
மற்றவர்கள் நிலத்தில் கோவில்கள் ஹராமாக இல்லை. ஆலயங்கள் இருந்த நிலங்கள் தான் கைமாறி உள்ளன.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
தென் கிழக்காசியாவில் விரைவாக பணக்கார நாடாக மலேசியா மாறியது. இதற்கு முக்கிய காரணம் ரப்பரும் ஈயமும் தான்.
இதில் ரப்பர் மரத்தை சீவி ரத்தத்தை சிந்தி நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர்கள் இந்தியர்கள்.
அப்போது அவர்களின் பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது ஆலயங்கள் தான்.
தோட்ட துண்டாடல்களின் போது இவ்வாலங்கள் வெளியே வந்தன. இதை தான் இப்போது கோவில் ஹராம் என்று கூறுகிறார்கள்.
அதே வேளையில் ரப்பர் மரத்தை சீவி நாட்டை மேம்படுத்திய போது இந்த இந்தோனேசியர்களும் வங்காளதேசிகளும் இல்லை.
நாடு வளர்ச்சி கண்ட பின்னர் தான் இந்த இரு நாட்டினரும் இங்கு வந்தனர்.
அதே வேளையில் சட்டவிரோதமாக இங்கு வரும் அவர்களை நாம் ஹராம் என்று அழைக்க முடியாது.
ஆனால் இந்த நாட்டில் ரத்தம் சிந்தியவர்கள் வழிபடும் ஆலயங்களை மட்டும் ஹராம் என்று கூறலாம். இதில் என்ன நியாயம் உள்ளது.
மஇகா கெப்போங் தொகுதி கோலாலம்பூர் கல்வி புத்தாக்க ஆன்மா இயக்கத்துடன் இணைந்து நடத்திய கல்வியும் கருணையும் நிகழ்ச்சியில் பேசிய டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
நான் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
மற்றவர்கள் நிலத்தில் கோவில்கள் ஹராமாக இல்லை. ஆலயங்கள் இருந்த நிலங்கள் தான் கைமாறி உள்ளன.
இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 6:06 pm
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2025, 5:09 pm
அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தில் திருத்தம்; அக்டோபர் மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும்: ஃபஹ்மி
April 30, 2025, 5:09 pm
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மெத்தனமாக இருக்க வேண்டாம்: பிரதமர் எச்சரித்தார்
April 30, 2025, 5:04 pm