நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பி.எஸ். எம் கட்சி ஆயிர் கூனிங் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்: அரசியல் பகுப்பாய்வாளர்கள் கருத்து 

கோலாலம்பூர்: 

ஆயிர் கூனிங் சட்டமன்ற தொகுதியில் பி.எஸ்.எம் கட்சி போட்டியிடுவது என்பது அக்கட்சி நேரத்தை வீண்டிக்கிறது. 

இரு பெரும் கட்சிகள் மோதும் இந்த சட்டமன்ற தேர்தலில் பி.எஸ்.எம் கட்சி மோதுவது என்பது தேவையற்ற ஒன்று என மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தௌஃபிக் யாக்கொப் கூறினார். 

பி.எஸ்.எம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவே. இதனை அக்கட்சி உறுப்பினர்கள் நன்கு உணர வேண்டும் என்று அவர் தெரிவித்தார் 

மக்கள் நலனில் பி.எஸ்.எம் கட்சி கவனம் செலுத்தலாம். அதைவிடுத்து தேர்தலில் போட்டியிடுவதால் எந்தவொரு வெற்றியும் கிடைக்கும் சாத்தியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார் 

PSM, PRM MUDA ஆகிய கட்சிகள் மலேசியாவில் பலம் வாய்ந்த கட்சிகளாக இல்லை. இந்த கட்சிகள் தேர்தலில் நிற்பது நேரத்தை வீண்டிக்கிறது என்று அவர் விளக்கினார் 

அரசியல் கூட்டணி சேராமல் பி.எஸ்.எம் கட்சி போட்டியிடுவதால் எந்தவொரு அரசியல் வெற்றியையும் அக்கட்சியால் பெற முடியாது என்று மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மஸ்லான் அலி சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset