
செய்திகள் மலேசியா
பிறை இல்லாத தேசியக் கொடி விவகாரம்: இரண்டு ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தது சின் சியூ
கோலாலம்பூர்:
பிறை இல்லாத தேசியக் கொடி அச்சிடுவதில் ஏற்பட்ட பிழையைத் தொடர்ந்து, சீன மொழி செய்தித்தாள் சின் சியூ டெய்லி அதன் இரண்டு ஆசிரியர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
இரண்டு நபர்களும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நிர்வாக தலைமை ஆசிரியர் சான் அவுன் குவாங், செய்தித்தாளின் தலையங்கப் பிரிவின் துணைத் தலைமை ஆசிரியரும் இதில் அடங்குவர்.
இந்த இடை நீக்க முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
மேலும் விசாரணை முடியும் வரை அமலில் இருக்கும் என்றும் சின் சியூ டெய்லி நிர்வாகம் அறிவிக்கிறது என்று இன்றைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சீன அதிபரின் மலேசிய வருகையை முன்னிட்டு சம்பந்தப்பட்ட செய்திதாளில் தேசியக் கொடி, சீனக் கொடியை வெளியிட்டது.
இக்கொடியில் பிறை இல்லாதது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
April 19, 2025, 11:47 am
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி: அயூப் கான்
April 19, 2025, 11:46 am