நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் சுகாதாரத் தேவைகளை கவனிக்க 274 மருத்துவ அதிகாரிகளை சுகாதார அமைச்சு அனுப்புகிறது

புத்ராஜெயா:

இந்த பருவத்தில் ஹஜ் யாத்ரீகர்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய 274 மருத்துவஅதிகாரிகளை சுகாதார அமைச்சு அனுப்புகிறது.

அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிஃப்லி அஹ்மத் இதனை கூறினார்.

ஹஜ் யாத்ரீகர்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக சுகாதார அமைச்சு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 274 மருத்துவ அதிகாரிகளாக சவூதி அரேபியாவிற்கு அனுப்பும்.

இந்த பருவத்தில் நாட்டின் 31,600 வருங்கால ஹஜ் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தத் தொகை போதுமானது.

ஹஜ் பருவத்திற்கான புனித பூமிக்கான மருத்துவ பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சின் உயர் நிர்வாகக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

சுகாதார அமைச்சின் மேலாண்மைக்கான துணைப் பொதுச் செயலாளர் டத்தோ சஹ்ருல் ஹக்கீம் அப்துல்லா, தாபோங் ஹாஜி வாரியத்தின் ஹஜ் துறைத் தலைவர் முஹ்மத் ஹிஷாம் ஹாருன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset