நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைட் சாடிக்கின் மேல்முறையீடு வாதங்கள் நிறைவடைந்தன: தீர்ப்பு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

புத்ராஜெயா:

சைட் சாடிக்கின் மேல்முறையீடு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அர்மாடா நிதி தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் தண்டனை தொடர்பாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர்  சைட் சாடிக் அப்துல் ரஹ்மானின் தலைவிதி இங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் வேறொரு  தேதியை தீர்மானித்துள்ளது.

33 வயதான சைட் சாடிக்கின் மேல்முறையீட்டின் மீதான முடிவு, அவர் தனது தண்டனையை ரத்து செய்வதில் வெற்றி பெறுகிறாரா அல்லது குற்றவாளியாகவே நீடிப்பாரா என்பது,

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டத்தோ அகமத் ஜைடி இப்ராஹிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவால் தீர்மானிக்கப்படும்.

மற்ற இரண்டு நீதிபதிகள் டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ நூரின் பதாருடினும் இதனை முடிவு செய்வார்கள்.

சைட் சாடிக் சார்பில் அவரது வழக்கறிஞர்களான டத்தோ முகமட் யூசோப் ஜைனால் அபிடின்,  டத்தோ ஹிஸ்யாம் தே போ டீக் ஆகியோர் ஆஜராகினர்.

அதே சமயம் வழக்கு விசாரணையை டத்தோ வான் ஷஹாருடின் வான் லடின், ஃபாரா எஸ்லின் யூசோப் கான் ஆகியோர் கையாண்டனர்.

இன்றைய நடவடிக்கைகளில் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வழக்கு நிர்வாகம் முடிவெடுப்பதற்கான தேதியைத் தேர்ந்தெடுக்க நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாக அகமத் ஜைடி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset