நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவிற்கு புதிய தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலை மலேசியா பெற்றுள்ளது: மாட் சாபு

கோலாலம்பூர்:

சீனாவிற்கு புதிய தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலை மலேசியா பெற்றுள்ளது.

விவசாயம், உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு இதனை கூறினார்.

சீன அதிபர் ஷி ஜின் பிங் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா வந்திருந்தார். இப்பயணத்தின் போது  இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் சீன சந்தைக்கு புதிய தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை மலேசியா பெற்றது.

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான கடின உழைப்பு,  தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த ஒப்புதல் கிடைத்து.

மலேசியாவிலிருந்து சீனாவிற்கு புதிய தேங்காய் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான சீன மக்கள் குடியரசின் பொது சுங்க நிர்வாகம்,  விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான தாவர சுகாதாரத் தேவைகள் குறித்த நெறிமுறை மூலம்,

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற அமர்வு நேற்று நடைபெற்றபோது, ​​நாட்டின் விவசாயத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset