நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரி குறித்து விவாதிக்க இம்மாத இறுதியில் அமைச்சர்கள் அமெரிக்கா செல்கின்றனர்: ஃபஹ்மி

புத்ராஜெயா:

மலேசியா மீது டிரம்ப் அரசாங்கம் விதித்த வரி குறித்து விவாதிக்க இம்மாத இறுதியில் முதலீட்டு, வர்த்தக, தொழில் துறை அமைச்சரும் இரண்டாம் நிதியமைச்சரும் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

மற்ற நாடுகளின்மீது அமெரிக்கா விதித்துவரும் வரி தொடர்பான பிரச்சினைகளைக் கூட்டாக அணுக ஆசியான் உறுப்பு நாடுகளிடையே எட்டப்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அப்பயணம் அமையும்.

மேலும், அமைச்சர்கள் அமெரிக்கா சென்று திரும்பியதும் விவாதத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து விவரங்கள் அறியலாம் என்று அவர் கூறினார்.

டிரம்ப்பின் வரி விதிப்புக் கொள்கையால் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வரிகள் ஜூலை மாதம் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மலேசியா 24% வரி விதிப்பை எதிர்நோக்குகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset