நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சின் சியூவின் தலைமை ஆசிரியர், கிராஃபிக் டிசைனர் ஆகியோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்: ஐஜிபி

கோலாலம்பூர்:

சின் சியூ நாளிதழில் தலைமை ஆசிரியர், கிராஃபிக் டிசைனர் ஆகியோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் இதனை உறுதிப்படுத்தினார்.

செய்தித்தாளின் முதல் பக்கத்தில் முழுமையடையாத  தேசியக் கொடி விளக்கப்படத்தை வெளியிட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக  அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்காக அவர்களை நாங்கள் தடுத்து வைத்தோம்.

மேலும் விசாரணைக்காக வழக்கு தொடர்பான கணினிகள் மற்றும் பொருட்களைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றோம்.

இருவரும் நேற்று இரவு போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

முன்னதாக, புக்கிட் அமானில் உள்ள போலிஸ்படை தலைமையகத்தின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில்,

சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணைத் தலைமை ஆசிரியரிடமிருந்து போலிசார் மூன்று மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset