நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலக்கவியல் மோசடிகளைத் தடுக்க பேங்க் நெகாரா, பேங்க் ஆஃப் தாய்லாந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து 

கோலாலம்பூர்: 

இணைய பாதுகாப்பை அதிகரிக்கவும் இலக்கவியல் மோசடிகளைத் தடுக்கவும் பேங்க் நெகாரா மலேசியா, பேங்க் ஆஃப் தாய்லாந்து ஆகிய வங்கி கூட்டமைப்புகள் இணைந்து MOU புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பேங்க் நெகாரா மலேசியாவின் கவர்னர் டத்தோஶ்ரீ அப்துல் ரஷீட் கஃப்ஃபோர், BOT கவர்னர் டாக்டர் செதாபுட் சுதிவார்த்னாருவேபுட் இருவரும் கலந்து கொண்டனர் 

நிதியக துறையில் இணைய பாதுகாப்பினை உறுதி செய்ய இரு நாட்டு வங்களும் முனைப்பு காட்டுவதால் இலக்கவியல் மோசடிகளைத் தடுக்க வழிவகுக்கும் என்று டத்தோஶ்ரீ அப்துல் ரஷீட் கூறினார் 

இணைய பாதுகாப்பில் காணப்படும் அறிவு பரிமாற்றம், தகவல் பகிர்வு, நடவடிக்கை கலந்தாய்வு ஆகியவைகளில் மலேசியாவும் தாய்லாந்தும் முன்னோடியாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் நிதி கழகங்களை முன்னெடுத்து செல்வதில் பேங்க் நெகாரா மலேசியா தொடர்ந்து அதன் கடமைகளை செய்யும் வேளையில் இணைய பாதுகாப்பு, இலக்கவியல் மோசடிகளை தடுக்க முடியும் என்று பேங்க் நெகாரா தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset