நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அமெரிக்கா: மலேசியா வரவேற்பு 

கோலாலம்பூர்: 

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பாக 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. 

இதனை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு செய்தார். 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை மலேசியா வரவேற்பதாக முதலீடு, வர்த்தகம், தொழிற்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் கூறினார் 

ஆசியான் பொருளாதாரத்திற்குக் கடும் சோதனை ஏற்படுத்தும் விதமாக அமைந்த இந்த வரி விதிப்பை அமெரிக்கா நிறுத்தியுள்ளது 

சீனாவோ அமெரிக்காவோ எந்த நாடாக இருந்தாலும் மலேசியா தொடர்ந்து திறந்த பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 

அமெரிக்காவுடன் பொருளாதார சிக்கலைக் களைய தனது அமைச்சு முழுமையான ஆய்வை மேற்கொள்ளும் என்று தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset