நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹட்ஜாய் நகரில் நடந்த கொள்ளைச் சம்பவம்: மலேசியர் என நம்பப்படும் முதியவரை தாய்லாந்து போலிசார் கைது செய்தனர்

பேங்காக்:

தாய்லாந்து போலிசார் இன்று ஹட்ஜாய்  தங்கக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மலேசியர் என நம்பப்படும் முதியவரைக் கைது செய்தது.

6ஆவது புலனாய்வு போலிஸ் பிரிவின் செயல் தலைவர் அனுசோர்ன் தோங்சாய் கூறுகையில்,

பேங்காக்கிற்கு தப்பிச் சென்ற சந்தேக நபர், நோந்தபுரியில் உள்ள தனது மகனின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் இருந்த காலம் முழுவதும் 61 வயதான சந்தேக நபர் அதிகாரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக பல்வேறு அடையாளங்களைப் பயன்படுத்தி மாறுவேடத்தில் இருந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் ஹட்ஜாய்யிலிருந்து பேங்காக்கில் உள்ள மோச்சிட் பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் சென்று, பின்னர் நொந்தபுரியில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு டாக்ஸியில் செல்ல முயன்றது கண்டறியப்பட்டது.

இந்த சந்தேக நபரை தங்கம், ஒரு கைத்துப்பாக்கி,  பல உயிருள்ள தோட்டாக்கள் வடிவில் ஆதாரங்களுடன்  போலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset