நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: சம்பளக் குறைப்பின் வாயிலாக 500,000 ரிங்கிட்டை வசூலிக்க சிலாங்கூர் அரசு இலக்கு

ஷாஆலம்:

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: சம்பளக் குறைப்பின் வாயிலாக 500,000 ரிங்கிட்டை வசூலிக்க சிலாங்கூர் மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையின் அடையாளமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் பதவியில் உள்ள அரசு ஊழியர்கள் உட்பட எனது சம்பளத்தை குறைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியாக மாற்றப்படவுள்ளது.

சிலாங்கூர் பிரிஹாதின் நிதியில் குறைந்தபட்சம் 5 00,000 ரிங்கிட்டை திரட்ட மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து 1,000 ரிங்கிட் பங்களிப்பார்கள்.

எதிர்க்கட்சி உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் 200 ரிங்கிட்டை பங்களிப்பார்கள்.

அதே நேரத்தில் கிரேட்  48, அதற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் 50 ரிங்கிட்டை  பங்களிப்பார்கள்.

இது மாநில அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட மீட்பு செயல்முறைக்கு உதவப் பயன்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset