நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களின் குறைகளைக் கேட்க 23 தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் இறங்கினர்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரின் கம்போங் சுங்கை பாரு பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் சர்ச்சையைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் மக்களை மொத்தம் 23 தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவரும், லாரூட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுதீன் தலைமை தாங்கினார்.

இந்தப் பகுதியில் வளர்ச்சித் திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் விளக்கங்கள், புகார்களை நேரடியாகக் கேட்கும் நோக்கத்துடன் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பில் கம்போங் சுங்கை பாரு தற்காலிகக் குழுவின் தலைவர் ஜைனப் அலியாஸ், குடியிருப்பு பிரதிநிதி ரஃபிதா இப்ராஹிம்,  தனியார் சொத்து ஆராய்ச்சியாளர் முசாபர் ரஸ்மான் ஆகியோர் விளக்கக்காட்சிகளை வழங்கினர்.

அடுத்த அமர்வில் இந்தப் பிரச்சினையை மக்களவைக்குக் கொண்டுவருவதாக டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் உறுதியளித்தார்.

மேலும் எதிர்க்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பை குடியிருப்பாளர்களுக்கு சிறந்த தீர்வைக் கண்டறியும் முயற்சியாக விவரித்தார்.

உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset