நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிபதிகள் நியமனங்களில் அரசாங்கம் தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்: பிரதமர்

கோலாலம்பூர்:

நீதித்துறை நியமன ஆணையம்  சட்டம் 2009 இன் செல்லுபடித்தன்மைக்கு தற்போது சட்டரீதியான சவால்கள் இருந்தாலும், நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கான தனது நிர்வாகத்தின் முயற்சிகள் தொடரும்.

பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

வழக்கறிஞர் சையத் அமீர் சயாகிப் அர்சலான் சையத் இப்ராஹிம், எஸ்பிகே சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற அடிப்படையில் நீதித்துறை மறுஆய்வு மனுவை தாக்கல் செய்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கம் இந்தச் சட்டத்தின் செல்லுபடியை ஆதரிப்பதாகவும், ஆனால் சட்ட செயல்முறையை மதிப்பதாகவும், மறுஆய்வு விண்ணப்பத்தில் தலையிடாது.

இருப்பினும், நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரும் இந்தச் சட்டம் தொடர்பான கவலைகளை அரசாங்கம் புறக்கணிக்க முடியாது.

இந்தப் பிரச்சினை புறக்கணிக்கப்படக்கூடிய ஒன்றல்ல.

மேலும் இது சட்டம், நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பின் கண்ணோட்டத்திலும் லென்ஸிலும் இருந்து தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset