நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு மிம்கோய்ன் உரிய வழிகாட்டல்களை வழங்கும்: டத்தோ அப்துல் ஹமித்

கோலாலம்பூர்:

இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு மிம்கோய்ன் உரிய வழிகாட்டல்களை வழங்கும்.

மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக தொழியல் சம்மேளனமான மிம்கோய்ன் நாட்டில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

68க்கும் மேற்ப்பட்ட வர்த்தகத்தை சேர்ந்தவர்கள் மிம்கோய்னில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அதிகமான வர்த்தகம் செய்பவர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் அவர்களைக் காக்கும் அரணாக மிக்கோய்ன் விளங்கி வருகிறது.

வர்த்தகம் செய்பவர்கள் அவ்வப்போது பல புதிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை மிம்கோய்ன் வழங்கி வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பல பட்டறைகளையும் மிம்கோய்ன் நடத்தி வருகிறது.

இதில் கலந்து கொண்டு பயன் பெற்றவர்கள் அதிகமானவர்கள்.

அதேவேளையில் வெளிநாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை இங்குள்ள வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவில் மிம்கோய்ன் பேராளர் குழு திமோர் லெஸ்தே சென்று அங்குள்ள வர்த்தக வாய்ப்புகளை ஆராய உள்ளது.

இப்படி இந்திய முஸ்லிம்களின் வர்த்தக வெற்றிக்கு மிம்கோய்ன் தொடர்ந்து பாடுபடும்.

தலைநகரில் நடைபெற்ற மிம்கோய்ன் நோன்பு பெருநாள் திறந்த உள்ள உபசரிப்பில் உரையாற்றிய டத்தோ அப்துல் ஹமித் இதனை கூறினார்.

நாட்டின் பல முன்னணி வர்த்தகர்கள், வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset