நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐ-பேப் திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரிங்கிட் வரை உதவி நிதி; இந்திய வர்த்தகர்கள் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

ஐ-பேப் திட்டத்தின் கீழ் இந்திய வர்த்தகர்கள் 1 லட்சம் ரிங்கிட் வரை உதவி நிதி பெறலாம்.

இதற்கு அவர்கள் ஏப்ரல் 7 முதல் 21ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

நாட்டில் உள்ள இந்திய வணிகர்களின் மேம்பாட்டிற்காக அமைச்சு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தான் ஐ-பேப் எனும் இந்திய சிறு வணிகர்கள் மேம்பாட்டுத் திட்டம் எனும் புதிய திட்டம் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

கட்ந்தாண்டு வெற்றியை தொடர்ந்து இவ்வாண்டு அமைச்சின் கீழ் இயங்கும் எஸ்எம்இ கோர்ப் வாயிலாக கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இக்கிராண்டிற்கான விண்ணப்பம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி திறக்கப்பட்டவுள்ளது.

கடந்தாண்டு 3 லட்சம் ரிங்கிட் வியாபாரம் இருந்தால் மட்டுமே இம்மானியத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

ஆனால் இம்முறை அதுபோன்ற விதிமுறைகள் இல்லை. அனைவரும் விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்பாக விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன்.

ஆகவே இந்திய வணிகர்கள் இந்நிதியை கொண்டு தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset