நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Persatuan Sairam Saibaba Dwarakamai Malaysia ஏற்பாட்டில் ஶ்ரீ ராம நவமி விழா வெகு விமரசியாக நடைபெற்றது

டாமான்சாரா டாமாய்: 

Persatuan Sairam Saibaba Dwarakamai Malaysia ஏற்பாட்டில் ஶ்ரீ ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி வெகு விமரசியாக நடைபெற்றது. 

ராமரின் அவதாரத்தைப் போற்றும் இவ்விழா டாமன்சாரா டாமாயிலுள்ள Sairam Saibaba Dwarakamai Centre-இல் நடந்தது. 

ஸ்ரீ ராமர் அவதரித்த நாளாக இது கருதப்படுவதால், உலகம் முழுவதும் பக்தர்கள் இந்நாளை பக்திநெறியுடன் கொண்டாடினர். 

ஶ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிபாட்டில் காலை மணி 6.30 தொடங்கி இரவு 10.30 மணி வரை பூஜைகள், ராம நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட பல பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

அன்று இரவு கோலாட்டம், மேளத் தாளத்துடன் சாய் பாபா ஊர்வலமும் நடைபெற்றது. 

இந்த விழாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பொதுமக்களுக்காக காலையுணவு, மதிய அன்னதானம், தேநீர் விருந்து உட்பட இரவு உணவை  Persatuan Sairam Saibaba Dwarakamai Malaysia என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

ஶ்ரீ ராம நவமி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழு சார்பாக Persatuan Sairam Saibaba Dwarakamai Malaysia அமைப்பின் தலைவர் சாய் திரேசா மோகன் நன்றி தெரிவித்தார்.  

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset