
செய்திகள் இந்தியா
காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் 93-ஆவது வயதில் காலமானார்
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 93.
வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
இலக்கியச் செல்வர் என்று வர்ணிக்கப்பட்ட குமரி அனந்தன், முன்னாள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் அண்ணனுமாவார்.
தமிழ்நாடு அரசின் ‘தகைசால் விருது’ பெற்றவர் திரு குமரி அனந்தன்.
தமிழக சட்டமன்றத்திற்கு ஐந்து முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர் அவர்.
அத்துடன், 1977-ஆம் ஆண்டு நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அனந்தன் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கும் சென்றார்.
குமரி அனந்தன் மறைவுக்குக் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 17, 2025, 7:00 pm
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது
April 15, 2025, 5:29 pm
கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் தேவை: இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை
April 15, 2025, 11:35 am
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
April 13, 2025, 3:22 pm
இந்தியாவில் 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை முடங்கியது
April 11, 2025, 6:11 pm
டெல்லி செங்கோட்டை, ஜாமிஆ மஸ்ஜித் வளாகங்களில் வெடிகுண்டு: புரளி என்று போலிசார் தகவல்
April 11, 2025, 6:02 pm
அரசு வேலை, நிலம் வேண்டாம்; ரூ.4 கோடி போதும்: வினேஷ் போகத்
April 10, 2025, 5:32 pm