நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவின் உயர் வரியால் மலேசியா பொருளாதார மந்த நிலையை சந்திக்காது: பிரதமர் உறுதி

கோலாலம்பூர்:

அமெரிக்கா உயர் வரிகளை அமல்படுத்தினாலும் நாட்டின் பொருளாதாரம் மீள்தன்மையுடன் இருப்பதால் மலேசியா தற்போதைக்கு மந்த நிலையை சந்திக்காது.

பிரதமர் டத்தோஸ்ரீ டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு எதிராக மலேசியா பழிவாங்கும் வரிகளை அறிமுகப்படுத்தாது.

பொருளாதாரக் கண்ணோட்டத்தில், 24 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால், 2025ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சித் திட்டமான 4.5 - 5.5 சதவீதத்தை திருத்த வேண்டும்.

இருப்பினும் இப்போதைக்கு மலேசியாவில் மந்தநிலையை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நாட்டின் பெரிய பொருளாதார அடிப்படைகள் இன்னும் வலுவாக இருப்பதாக நிதியமைச்சராகவும் இருக்கும் டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset